Monday, December 24, 2007

பொன்னியின் செல்வன்

மதி மயக்கம் கொள்ள செய்யும் ஒரு அருமையான காவியத்தை, நான் சில நாட்களுக்கு முன்பு படித்தேன். பொன்னியின் செல்வன். தமிழ் மீது காதல் கொள்ள செய்துவிடும் அந்த காவியம். கவிதை மீது காதல் கொள்ள செய்துவிடும் அந்தக் கதை. மற்ற சாதரண கதைகளை காட்டிலும் இக்கதையின் சிறப்பு என்ன? இது நாம் தமிழ்நாட்டின் வரலாறு. ஒவ் ஒரு சம்பவங்களும் நம் தமிழ்நாட்டில் நடந்தவை. தஞ்சை பெரிய கோவில் கட்டிய ராஜ ராஜ சோழனை (அருள் மொழி வர்மன்) பற்றிய கதை. உலக அளவில் அதிசயமாக கருதப்பட்ட பெரிய கோவில் கட்டிய மன்னாதி மன்னனை பற்றிய கதை. ஒவ் ஒரு தமிழனும், குறிப்பாக தஞ்சை மார்க்கத்தில் உள்ளவர்கள் படிக்க வேண்டிய கதை.[என்னடா ஓவரா பில்ட் அப் குடுக்குராநேனு நேனைகுரீங்கள? அப்படிதான் அந்த கதையும் இருக்கும்... ஏக வர்ணனைகள்.. எக்கச்சக்க பில்ட் அப்புகள் அந்த கதையில் இருக்கும் என்பதை உணர்த்தத்தான் அவ்வாறு கூறினேன் (அனால், அக்கதையில் வரும் பில்ட் அப்புகள் ரசிக்கும் படி இருக்கும், இந்த ப்லாக் மாதிரி மொக்கையாக இருக்காது)]


மன்னர்கள் எப்படி மக்களுக்காக உழைத்தார்கள்? மக்கள் எப்படி மன்னர் மீது அன்பு வைத்திருந்தார்கள்? வீரன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? அரசன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? நாட்டில் குழப்பம் செய்யும் சதிகாரர்கள் எப்படி இருப்பார்கள்? இது மட்டும் அல்ல... கண்டதும் காதல், கேட்டதும் காதல், பழகியதால் வரும் காதல், காதலுக்காக உயிர் விடும் காதல், என்று special attention காதலுக்கும் குடுக்க பட்டுள்ளது.


இதற்கு மேல் என்னால் continue செய்ய முடிய வில்லை. அதனால், இந்த கதையை படிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படித்து பார்க்கவும். இந்த ப்லோகையே இவ்வளவு தூரம் படித்தீர்களானால், கண்டிப்பாக, அந்த கதையை வுங்களால் படிக்க முடியும் என்று உறுதி கூறுகிறேன். இனிமேல் தமிழில் ப்லாக் எழுதினால் கை கால் முறிக்கப்படும் என்று வுங்களில் யாருக்காவது தோன்றினால், கண்டிப்பாக கூறிவிடவும், இல்லையேல், நான் மீண்டும் தமிழில் ட்ரை பண்ணுவேன் என்று எச்சரிக்கை செய்கிறேன்!

No comments: