Saturday, May 08, 2010

நான் புடிச்ச முயலுக்கு அஞ்சு காலு - சுருள் சுத்தும் நிகழ்வு

எப்பவும் போல வெட்டியா இருந்தப்ப ஒரு weekend la என் gTalk status message 'நான் புடிச்சமுயலுக்கு அஞ்சு காலு'னு வச்சுருந்தேன். என்ன (மகனாச்சேனு வேற வழி இல்லாம) மதிகுற வெகு சில பேருலஒருத்தரான என் அப்பா 'என்ன status message' னு கேட்டார். 'சும்மா வெட்டியாதாம்பா வச்சுருக்கேன்'னு நான் சொல்ல, 'வெட்டியா இருந்தாலும் ஒரு logic வேணாமா? at least "நீ புடிச்ச முயலுக்கு அஞ்சு காலுன்னு" சொன்னா கூட ஒரு logic இருக்கு' னுஅப்பா சொல்ல, 'என்ன குற்றம் கண்டீர் தந்தையே' னு நான் argumenta ஆரம்பிச்சேன்.

'நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுனா என்னனு தெரியுமா?'
'தெரியும் பா... பிடிவாதமா இருக்குறது தானே?'
'அதோட background story என்னனு தெரியுமா?'
'சத்தியமா தெரியாது :)'

So, என் தந்தை என்னை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று நிலா சோறு ஊட்டிவிட்டு சொல்ல வேண்டிய கதையை அப்படியே அந்த room லயே சொல்ல ஆரம்பித்தார்...

'முன்றொரு காலத்தில், ஒரு முனிவரிடம் சில சீடர்கள் இருந்தார்கள்... அவர்கள் காட்டிலே இருந்தார்கள்... தினமும் ஒரு சீடன் சென்று வேட்டையாடி உணவு கொண்டுவரவேண்டும்... எல்லாரும் சேர்ந்துதான் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்... அப்புடி இருந்தபோது, ஒரு நாள் ஒரு சீடன் முயல் ஒன்றை வேட்டையாடி சமைத்து வைத்து மற்றவர்களுக்காக காத்திருந்தான்... அனால் அவனுக்கு ஆர்வத்தை கட்டுபடுத்த முடியாமல், முயலின் ஒரு காலை உண்டுவிட்டான்...

'எல்லாரும் வந்து சாப்பிட ஆரம்பிக்க போகும் போடு, ஒரு கால் குறைவதை கண்டுபிடித்தனர்... அவனிடன் 'ஏன் நீ நாங்கள் வருவதற்கு முன்பே சாபிடாய்?' என்று கேட்க, நம் நண்பர் என்ன சொல்லுவது என்று தெரியாமல் 'நான் சாப்பிடவில்லை... நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்தான் இருந்தது என்று சொன்னான்'. எத்தனையோ முறை கேட்டாலும், அவன் ஒரே பதில்தான் சொன்னான் "நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்". இதனால்தான் உன் status message logic கே இல்லாமல் இருக்கிறது ' என்று அப்பா முடித்தார்...

ச... இத்தன நாலா இது தெரியாம போச்சேன்னு feel பன்னி ஓடி போய் அம்மாகிட்ட கேட்டேன், 'அம்மா உனக்கு அந்த story தெரியும்மா?' னு... 'தெரியாது'னு அம்மா தெரியாம சொல்ல (சிக்கி விட்டார்கள் என்ற சந்தோசத்தில்) அம்மா கிட்ட அந்த மொக்கைய போட்டுட்டு யோசிச்சேன்... அம்மாவுக்கே தெரியலனா, நெறைய பேருக்கு கண்டிப்பா தெரியாதுன்னு... super da Amudha... blog ல மொக்க போட ஒரு topic கிடைச்சுதுன்னு cruel ஆ ஒரு சிரிப்பு சிரிச்சிகிட்டே blogger.com type பன்னி, ஒரு draft உருவாக்கினேன்...

பி.கு.: சுருள் சுத்தும் நிகழ்வு = Flashback னு நீங்கள் புரிந்துருபீர்கள் என்று நம்புகிறேன். நன்றி :)

5 comments:

Jency said...

sema mokka! title-il sor pizhai thiruthi kollavum...surul suththam illa suththum. adhe madhiri first para la ungappa sonnar nu solli marubadiyum 5 kaal ne ezhudhi irukeenga....mokka pottalum ok ana olarakoodadhu :D

Amudhan said...

மிக்க நன்றி ஜென்சி அவர்களே... நான் தலைப்பில் இருந்த பிழையை சரி செய்துவிட்டேன்... அனால், என் தந்தை கூறியதாக சொன்னதில் பிழை இல்லை :) 'நீ புடித்த முயலுக்கு அஞ்சு கால் என்று சொன்னாலாவது அர்த்தம் இருக்கும்' - ஏன் என்றால், அப்படி கூறி ஒருவன் மேல் பலி போடலாம் இல்லையா? அதாவது, 'நீ புடித்த முயலுக்கு அஞ்சு கால்... நாலு கால் இங்க இருக்கு... இன்னொரு கால் எங்கே?' என்று கொவுன்டமணி செந்தில் பொல... :D

Baski said...

Good blog

Intha kathai indru oru thagaval ketturaken.. thanks for Reminding


//ஏன் என்றால், அப்படி கூறி ஒருவன் மேல் பலி போடலாம் இல்லையா?

bali illapa Pazhi podalam...

Jency said...

Ssssh....ippave kanna kattudhe :x

Amudhan said...

@Baski:
Blogla spelling mistake irundha edit pannidalam.. aana commentla spelling mistake iruke... onnum panna mudiyaadhe :(
Next time I would be careful... and will try not to kill Tamizh with spelling mistakes...

@Jency:
:)